ஒளவையும் அதிசய நெல்லிக்கனியும்...!

ஒளவையும் அதிசய நெல்லிக்கனியும்...!

அதியமான் நெடுமான் அஞ்சி, தகடூரை ஆண்டு பெரும் வீரன். இவர் ஒளவையிடம் அன்பு பாராட்டி அவரால் பல பாடல்கள் பாடப்பெற்ற நல்லவர், வல்லவராவர். வீரத்திலும், வள்ளல் குணத்திலும் மிகவும் புழ்பெற்றவர் இவர். ஒளவையின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரால் பல பாடல்கள் பாடப்பெரும் வாய்ப்புப் பெற்றவர்.

இவரின் புகழ்கண்டு பொறாமையுற்ற சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் ஒன்று கூடி மாநாடு நடத்தி இவர் மீது யுத்தம் நடத்த திட்டங்கள் தீட்டினர். அப்போது அங்கு யதேச்சையாக வந்த ஒளவை விடயம் அறிந்து அவர்களுக்கு அறிவுரை பகர்கின்றார். மிகவும் நல்லவனான அதியமான் நெடுமான் அஞ்சியை வஞ்சிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைகள் வரப்போவதில்லை, மாறாக ஒரு நல்லவனை அழித்த அவப்பெயர் மட்டுமே மிஞ்சும் எனப் பலவாறாக எடுத்துக்கூறி அவர்களின் போர்த்திட்டத்தைக் கைவிடச் செய்கிறார். ஒளவையின் பால் மதிப்புக்கொன்ட அவர்களும் உன்மையை உணர்ந்து போரிடும் எண்ணத்தைக் கைவிடுகின்ற‌னர். இதை குறிப்பிடும் ஒளவையின் பாடல் இதோ...

திணைः- தும்பை துறைः- தானைமறம்
களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே. (புறநானூறு 87)

இவ்வாறிருக்க மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியை காண ஒரு நாள் ஒளவை தகடூருக்கு வருகிறார். ஒள‌வையை அன்போடு வரவேற்று உபசரிக்கின்றான் மன்னன் அதியமான். அப்போது மன்னன் ஒரு நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்து உண்னும்படடி வற்புறுத்துகிறான், ஒள‌வையும் அக்கனியை உண்டார். அதன் வித்தியாசமான் சுவையில் அதிசயித்த ஒளவை, அதியமானிடம் அக்கனியைப்பற்றி விசாரிக்க. அது ஓர் அற்புத நெல்லிக்கனி என்றும் அதை உண்ணும் பேறு பெற்றவர் நீண்ட நெடுங்காலம் மரனமிலாப் பெருவாழ்வு பெற்று வாழ்வார் எனும் உண்மையை உரைக்கின்றான். அதிசயித்த ஒளவை நீண்ட காலம் வாழ வேண்டிய மன்னனே, வயதான எனக்கு எதற்கு இக்கனி, நீயல்லவோ இக்கனியை உண்டு நெடுங்காலம் வாழ வேண்டும் எனக் கேட்கிறார், அதற்கு மன்னன் அதியமான் கூறுகிறார், ஒளவை பிராட்டியாரே எனை போன்ற ஒரு மன்னன் நீண்ட காலம் வாழ்வதைக் காட்டிலும் உமைப் போன்றதொரு தமிழ்ப்புலவர் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்கு தொன்டு செய்வதே சாலச் சிறந்தது என்று. அதன் பின்னர் ஒள‌வை நெடுங்காலம் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது, அவரோடு இன்றள‌வும் மாவீரனும், சிறந்த தமிழ் நெஞ்சனுமாகிய அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழும் ஒளவையுடன் வாழ்கிற‌து.

0 கருத்துகள்: