இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள் என பகுத்துக் கூறப்படுகின்றன.இவர்களில் முந்தியவர் எனக்கருதப்படுபவர் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள் , நாலு கோடிப் பாடல்கள், நல்வழி நாற்பது போன்ற நூல்களை இயற்றியவர். இவர் மேலும் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் அசதிக்கோவை மற்றும் பந்தனந்தாதி காலத்தால் அழிந்து நமது கைக்கு எட்டாமல் போய்விட்டது.மேலும் இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர்.கீழக்கண்டவாறு சரித்திர ஆசிரியர்களால் ஒளவையின் நூல்கள் பகுத்துக் கூறப்படுகின்றன, சங்கப்பாடல்கள் தனிப்பாடல்கள் (12-ஆம்நூற்றாண்டு) நீதிநூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்) சமயநூல்கள் (விநாயகர்அகவல், ஔவைகுறள்) சிற்றிலக்கியம் (பந்தன்அந்தாதி) ஒளவை அபரிமிதமான அறிவாற்றலும், அற்புதமான கவியாற்றலும் வாய்க்கப் பெற்றவர் என்பதை மேற்காணும் அவருடைய படைப்புக்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவுற எடுத்தியம்புகின்றன.
11 கருத்துகள்:
thamizh mozhi thamizharukku kaN ponRadhu. Indha KaNNukku oLi vazhangiya viLakkukku Ayiram nanRigaL!
thamizh mozhi thamizharukku kaN ponRadhu. Indha KaNNukku oLi vazhangiya viLakkukku Ayiram nanRigaL!
ஔவையார் பற்றி அறிந்துக் கொள்ள மிக உதவியாக இருந்தது
தற்போது நல்வழி, மூதுரை,கொன்றைவேந்தன்,ஆத்திச்சூடி படித்துவிட்டேன், வேறேதேனும் நூல் உள்ளதா?
Vazhkaiyil nam seiyum seyalkal matrum sindhanaikal sariyanatha ena theermanika avvai migavum udhavi purindhullar.
கருத்துக்களுக்கு நன்றி...உண்மைதான் six டாலர் அவர்களே!
ஔவையின் "ஈஸ்வர மாலை" கிடைக்குமா? அகர வரிசையில் சிவனைப்பற்றி வணங்கியுள்ளார்
கயல் விழி
கயல் விழி
மிகவும் சிறப்பாக இருந்தது
மிகவும் பயின் உள்ளது
கருத்துரையிடுக