தமிழ்பாட்டியும் தமிழக்கடவுளும்

தமிழ்பாட்டியும் தமிழக்கடவுளும்

 ஒளவை பிராட்டியார் தமிழ்க்கடவுள் முருகனின்பால் அதீத அன்பு பூண்டவர். முருகப் பெருமானும் ஒளவைக்கு திருவ‌ருள் புரிந்து, இவ்வுலகிற்கு பல நீதிகளை உணர்த்திட திருவுளம் கொன்டார். அதற்கான நன்நாளும் விரைவில் வாய்த்தது.ஒரு முறை ஒளவை கடும் வெயிலில் மிகவும் சோர்வுடன் மதுரை நோக்கி நடந்து கொண்டிருந்தார். இவரது நிலைகண்டு முருகன்ப் பெருமான் ஒரு மாட்டுக்கார சிறுவனாக வேடம் புனைந்து, ஒளவை வரும் வழியில் வழியிலிருந்த ஒரு நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார்.
 அதீத களைப்புடன் அவ்வழி வந்த ஒளவைப்பாட்டி அந்த நாவல் மரத்தின் அடியில் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீதிருந்து கவனித்த சிறுவன் ஒள‌வையை நோக்கி, "என்ன பாட்டி! மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே? உங்கள் களைப்பை நீக்க நாவல் பழங்கள் வேண்டுமா?
 " எனக்கேட்டான். மகிழ்ச்சியடைந்த ஒளவை "வேண்டும் அப்பனே" என்றார். உடனே முருகன், "பாட்டி! உங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''எனக் கேட்டான். இதைகேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,"சுட்ட பழம் கொடு" என்றார். சிறுவன் கிளையை உலுக்கினான். நன்கு பழுத்த சுவையான ‌நாவல் பழங்கள் பூமியில் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் பழுத்த அந்தப் பழங்களில் மணல் ஒட்டிக்கொண்டது. ஒளவை அவற்றை எடுத்து மணலை நீக்குவத‌ற்றகாக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்தக்கொண்டிருந்த சிறுவன்,"பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்களேன்" எனக்கூறி நகைத்தான்.

 சிறுவனின் மதிநுட்பத்தைக் கண்டு வியந்த ஒளவைபிராட்டி, மரத்தில் அமர்ந்து இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் அறிந்து வணங்கினார். அதன் பின்னர் முருகக்கடவுளும் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையால் வழி உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, "உயிர்களின் மீது "உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் நீக்க கல்வ ஞானம் ஒன்று மட்டுமே போதாது. இறைவனை அறியும் மெய்ஞானமும் தேவை. பற்றை அகற்றி இறைவனை உணர்தலே சாலச் சிறந்ததாகும் என்பதே இக்கதை கூறும் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

.


.

fallen leaves  ... Pictures, Images and Photos