பக்கங்கள்

நாலு கோடிப் பாடல்கள்


"

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

பொருள் : தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"

பொருள் : உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

பொருள் : கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

பொருள் : எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.

13 கருத்துகள்:

  1. அருமையான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஔவையார் புத்தகங்களின் பட்டியல் http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/gnanakural.html

    பதிலளிநீக்கு
  3. ஔவைபாட்டியின் பாடல்கள் என்றேன்றும் வற்றா சுனையாய் தமிழர்களது இதயத்தில்

    பதிலளிநீக்கு
  4. தன்மானத்தை உலகுக்கு சொன்ன கவியல்லவோ தமிழ்க்கவி ஔவையார்.

    பதிலளிநீக்கு
  5. நந்நெறிகளை தமிழ்தான் முதன்முதலில் உருவாக்கியது

    பதிலளிநீக்கு
  6. தமிழுக்காக வாழுகிறேன் என்று மார் தட்டும் சிலர் தமிழே அறியாதவர்கள். மேலே குறிப்பிட்ட பாடலில் பல தவ்றுகள் உள்ளன. அவ்வையார் இன்று இருந்தால் தூக்கிலிட்டுக் கொண்டு சாவாள். நல்ல தமிழுக்கு அடையாளம் பாடலை அப்படியே எழுதுவது தான். திராவிட மாடலை ஒழித்துத் உண்மையான தமிழனாக வாழவும். தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று உளறின முட்டாள் சிறியோன், அவனுடைய வழித் தோன்றல்களாக வ்ந்தேறிய போலித் தமிழ்க் கொள்ளையர்கள் வழி செல்லாது, நல்ல தமிழர்கள் வழி செல்லவும். நல்ல தமிழை எழுதி, நல்ல தமிழை தவறில்லாது உச்சரித்து, கொடுக்கவும். மொழி வெறியில்லாது அனைத்து மொழிகளைகளையும் மதிப்பவர்கள் தான் தன் தாய் மொழியை நன்கு பேச, எழுத முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! வணக்கம் எங்கு பிழையை கண்டீர்கள் என்று சற்று தெளிவாக சொல்லவும் .

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு


  8. நன்றி!

    இப்பாடல்களை "தமிழ் ஓசை" குழுவினர்
    பாடக் கேட்டு மகிழலாம்.முன்னுரையுடன் https://youtu.be/ouYFHmPgip4?feature=shared

    பதிலளிநீக்கு